எருமப்பட்டியில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு!

அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2025-12-24 15:27 GMT
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் உத்தரவின் பெயரில்,முன்னாள் அமைச்சர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி வழிகாட்டுதலின்படி. எம்ஜிஆர் க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி எருமப்பட்டி பகுதியில் கழக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீதேவி மோகன் தலைமையில்... *எருமப்பட்டி மேற்கு ஒன்றியம் பழையபாளையம்,போடிநாயக்கன்பட்டி,அலங்காநத்தம் பிரிவு,அலங்காநத்தம்,பொட்டிரெட்டிபட்டி, பொன்னேரி,மற்றும் எருமப்பட்டி பேரூராட்சி, மற்றும் எருமப்பட்டி கிழக்கு ஒன்றியம் பவித்திரம் ஊராட்சி பகுதியில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தபட்டது.இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் சேவல் ராஜீ, எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்தி,எருமப்பட்டி பேரூர் கழக செயலாளர் மெடிக்கல் பாலு மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.*

Similar News