நாமக்கல்லில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்.
அதிமுக மாநகர செயலாளரும் /முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.;
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலை மற்றும் திருவுருவப் படங்களுக்கு,கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர்,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் (24.12.2025) அனுசரிக்கப்பட்டது இதனை முன்னிட்டு,நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் திருவுருவ சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவியும் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். இதன்படி,நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் செலம்ப கவுண்டர் பூங்கா அருகில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு, அதிமுக மாநகர செயலாளர் / முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.பிரதான சாலையில் உள்ள (பெரியார்,அண்ணா, எம்ஜிஆர்)மூன்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான காலண்டரை முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் வழங்கினார்.