ராசிபுரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் முன்னாள் அமைச்சர் சரோஜா நினைவஞ்சலி..
ராசிபுரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் முன்னாள் அமைச்சர் சரோஜா நினைவஞ்சலி;
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் உத்தரவின் பெயரில் தமிழக முழுவதும் அதிமுகவினர் எம்ஜிஆர் க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ.சரோஜா, மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் அதிமுக நகர கழக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவரது திருவுருவ சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.. இந்த நிகழ்வில் ராசிபுரம் அதிமுக நகர நிர்வாகிகள், வார்டு முன்னாள் இன்னாள் கவுன்சிலர்கள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.