புதிய சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி.
புதிய சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி.
சீதாபுரம் கிராமத்தில் KPY பாலா சொந்த செலவில் புதிய சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேருந்து வசதி அல்லது ஆட்டோ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சீதாபுரம் கிராம மக்கள் KPY பாலாவிடம் கோரிக்கை செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சீதாபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு மழைக்காலங்களில் குடிநீர் சரியாக இல்லை என கிராம பொதுமக்கள் நடிகர் KPY பாலா அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தேசு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் KPY பாலா அவர்கள் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதை அடுத்து KPY பாலா செய்தியாளர்களிடம் கூறுகையில்,இந்த ஒன்றியத்தில் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைத்துள்ளேன் இது மட்டுமில்லாமல் இதை சுற்றியுள்ள கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் அந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சீதாபுரம் கிராம மக்கள் KPY பாலாவிடம் எங்கள் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடந்து சென்று படிக்க வேண்டிய ஒரு சூழலானது உருவாகியுள்ளது எனவே இந்த பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி சீதாபுரம் கிராமத்திலிருந்து அச்சரப்பாக்கம் வரை மினி பேருந்து அல்லது ஆட்டோ ஒன்றினை ஏற்படுத்தி கொடுத்தால் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து KPY பாலா அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்காக விரைவில் மினி பேருந்து அல்லது ஆட்டோ ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தார்.