ராமநாதபுரம் ஒன்றிய பெரும் தலைவருக்கு நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

திருவாடானை ஒன்றிய பெருந்தலைவர் ராதிகா பிரபு ஐந்து ஆண்டு காலம் மிகச் சிறப்பாக மக்கள் பணி ஆற்றியதற்கு பொதுமக்கள் அரசு அதிகாரிகள் பாராட்டு

Update: 2025-01-06 09:28 GMT
ராமநாதபுரம் மாவட்டடம் திருவாடனை சட்டமன்ற தொகுதி ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய பெருந்தலைவர்,துணை தலைவர்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவிகாலம் நிறைவு பெறுவதையொட்டி நன்றி அறிவிப்பு விழாவாக ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் #ராதிகாபிரபு அவர்கள் தலைமையில் நன்றி தெரிவித்தல் நிகழ்வு விழா நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பேராசான் அண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஐந்து ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி பெருமையடைய செய்த ஒன்றிய பெருந்தலைவர் ராதிகாபிரபு அவர்களின் பணிகளை பாராட்டி வாழ்த்தினார் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர் நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் மோகன் கண்ணன் பேரூர் கழக செயலாளர் அண்ணன் #கண்ணன் ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணன் #சேகர் ஒன்றிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கழக முன்னோடிகள் பொதுமக்கள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி அருள்முடியப்பதாஸ் நாகராஜன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்

Similar News