கரூரில் உள்ளாட்சி நிர்வாகங்களை நகராட்சி
கரூரில் உள்ளாட்சி நிர்வாகங்களை நகராட்சி
கரூரில் உள்ளாட்சி நிர்வாகங்களை நகராட்சி & மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர். அண்மையில் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில், கரூர் மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள ஆண்டாங் கோவில் கிழக்கு மற்றும் ஏமூர் ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைக்கவும், இதே போல லிங்கம்ம நாயக்கன்பட்டி ஊராட்சியை பள்ளப்பட்டி நகராட்சியுடன் இணைக்கவும், மேலப்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சி பேரூராட்சி உடன் இணைக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் ஊராட்சிகளை இணைக்கும் போது 100 நாள் வேலை வாய்ப்பு, இலவச ஆடு, மாடு,கோழி வழங்கும் திட்டம், இலவச வீடுகள் திட்டம், விவசாய மானியங்கள் போன்றவை பறிபோகும் எனவும், சொத்துவரி, குடிநீர் வரி, வணிகவரி என அனைத்து வரி இனங்களும் பல மடங்கு உயரும் என்பதால், ஊராட்சிகளை இணைக்க கூடாது என வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேல் வை சந்தித்து மனு அளித்தார்.