கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் போட்டியை பார்வையிட தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் வருகை புரிந்தார். அப்பொழுது அதிமுக பொறுப்பாளர்கள், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியாளர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரருக்கும் விஜயபாஸ்கர் ரொக்க பரிசு வழங்கினார்.