கிரிக்கெட் வீரருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நடிகர்
குவாட்டர் கொடுக்காமல் காசு கொடுக்காமல் கோழி பிரியாணி கொடுக்காமல் வெற்றிகரமாக விஜய் மாநாட்டை நடத்திக் காட்டினார்: திருவள்ளூர் அருகே கிரிக்கெட் வீரருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நடிகர் சௌந்தர்ராஜா விமர்சனம்
குவாட்டர் கொடுக்காமல் காசு கொடுக்காமல் கோழி பிரியாணி கொடுக்காமல் வெற்றிகரமாக விஜய் மாநாட்டை நடத்திக் காட்டினார்: திருவள்ளூர் அருகே கிரிக்கெட் வீரருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நடிகர் சௌந்தர்ராஜா விமர்சனம். தெற்கு ஆசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கு உறுதுணையாக இருந்த கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஆனந்தனை கவுரவிக்கும் விதமாக அவரது சொந்த கிராமமான திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் திரைப்பட நடிகர் மண்ணிற்கும் மக்களுக்கும் அறக்கட்டளை நிறுவனர் சௌந்தர்ராஜா பங்கேற்று வாழ்த்தினார் மேலும் இந்த நிகழ்வில் திமுக திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் விடுதலை சிறுத்தை கட்சிகளின் மாவட்ட செயலாளர் அருண்கவுதம் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஆனந்தனை பாராட்டி சிறப்புரையாற்றினர் திமுகவினரும் திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்ற மேடையில் பேசிய அண்ணா ஒரு முக்கிய காரணம் திரைப்பட நடிகர் சௌந்தர்ராஜா மாண்புமிகு துணை முதல்வரும் கூத்தாடி தான் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் அணியில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் பங்கேற்று வெற்றி பெற முக்கியமாக வீரராக பணியாற்றியுள்ளார் டென்னிஸ் பந்து போட்டியில் பங்கேற்று பெருமை சேர்த்த வீரருக்கு அரசு பணி வழங்க வேண்டும் நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என சட்டத்தில் உள்ளதா அப்படிப் பார்த்தால் தமிழக துணை முதல்வரும் நடிகர் தான், அதுபோல் நடிகராய் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனர் தற்பொழுது விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை மட்டும் நடிகர் என விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது அண்டை மாநிலங்களில் கிடைக்கக்கூடிய நல்ல திட்டங்கள் கூட தமிழகத்தில் கிடைக்கவில்லை என்பதால் விஜய் அரசியலுக்கு வருகிறார் நல்லது செய்ய வருகிறார் நடிகர் விஜய் எலைட் அரசியல் செய்கிறார் என்ற விமர்சனங்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை, குவாட்டர் கொடுக்காமல் காசு கொடுக்காமல் கோழி பிரியாணி கொடுக்காமல் வெற்றிகரமாக மாநாட்டை நடத்திக் காட்டியது போல் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார்கள் தமிழக அரசியலில் நல்ல மாற்றம் வரும் என தெரிவித்தார்