மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு
மாம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதினால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாம்பட்டி, செல்லம்பட்டி, அனுமன்தீா்த்தம், கீழானூா், கைலாயபுரம், வேப்பம்பட்டி, காட்டேரி, தீா்த்தமலை, சட்டையம்பட்டி, மேல்செங்கப்பாடி, சந்திராபுரம், அம்மாபேட்டை, கொங்கவேம்பு, மாம்பாடி, கீழ்மொரப்பூா், மாவேரிப்பட்டி, பறையப்பட்டி, நரிப்பள்ளி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, சிக்களூா், பெரியப்பட்டி, கணபதிப்பட்டி, கூத்தாடிப்பட்டி, செக்காம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ஜனவரி 7 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.