கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று 1-ம் தேதி பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் அகஸ்தீஸ்வரம் - தென்தாமரை குளம் செல்லும் சாலையில் மரம் முறிந்து உயர் மின்னழுத்த கம்பியில் விழுந்ததில் மின்கம்பமும் முறிந்தது விழுந்தது.. இதில் மின்கம்பி துண்டாகி தொங்கியது. அந்த நேரம் சாலையில் வாகனங்களோ, பொதுமக்களோ யாரும் செல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இது குறித்து கொட்டாரம் மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மின் பணியாளர்கள் விரைந்து வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புது மின்கம்பம் நடப்பட்டு மாலை 6.15 மணியளவில் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.