மக்களுடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடிய காவல் ஆணையர்
மதுரை காவல் ஆணையர் பொதுமக்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடினார்.
மதுரையில் 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெரியார் பேருந்து நிலையம் மற்றும் காளவாசல் சந்திப்பில் மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் கேக் வெட்டி புத்தாண்டு தினம் சிறப்பாக பொதுமக்களுடன் கொண்டாடியும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேபோல் மதுரை நகரில் பல்வேறு இடங்களில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (தலைமையிடம்), துணை ஆணையர் (போக்குவரத்து), காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் இரவு பணி காவலர்கள் பொதுமக்களுடன் இணைந்து மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.