விவசாயிகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி முகாம்

Update: 2025-01-04 08:33 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பாபுராயன் பேட்டை எஸ் ஆர் எம் வேளாண் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் 90 நாட்கள் விவசாய பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலா முகர்ஜி குழு மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி முகாம் மொரப்பாக்கம் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமுக்கு சிறப்பு விருந்தினராக மொராப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்திகங்காதரன் கலந்துகொண்டு விவசாயம் பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக எஸ் ஆர் எம் கல்லூரியில் ஆசிரியர்களான முனைவர் கற்பகவல்லி நற்பெயர் நோய் மேலாண்மை பற்றியும், முனிவர் ஜெயஜோதி அவர்கள் திருந்திய நெல் சாகுபடி பற்றியும், முனைவர் இந்துஸ்ரீ அவர்கள் விவசாய மேலாண்மை மற்றும் பயிர் காப்பீடு பற்றி பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் ஆருடன் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டனர்.

Similar News