ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்.
மதுரை தெற்குவாலில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மதுரை தெற்கு வாசல் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.1) இரவு சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரருக்கு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்விற்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வாங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.