ராசிபுரம் அருகே சர்ச்சுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது ஏரி அருகே அமர்ந்த நபர் எதிர்பாராதவிதமாக விழுந்து பலி..
ராசிபுரம் அருகே சர்ச்சுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது ஏரி அருகே அமர்ந்த நபர் எதிர்பாராதவிதமாக விழுந்து பலி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொப்பப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(46) இவர் சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மாதா ஆலயத்திற்கு (சர்ச்சுக்கு) சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார்.வீடு திரும்பிய போது கோனேரிப்பட்டி பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் எரி அமைந்துள்ளது. ஏரியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஈஸ்வரன் அமர்ந்த போது எதிர்பாராத விதமாக ஏரியில் விழுந்ததாக கூறப்படுகிறது. காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சாலையில் இரு சக்கர வாகனம் இருப்பதைக் கண்டு ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குவே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஈஸ்வரனின் உடலை சடலமாக மீட்டனர்.பின்னர் உயிரிழந்த ஈஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உயிரிழந்த ஈஸ்வரனின் மனைவி பூங்கொடி ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது..