காவலர்களுக்கு பொதுமக்கள் மலர்மாலை அணிவித்து பாராட்டு.
ஆரணி நகர் முழுவதும் சிசிடிவி கேமாரா பொருத்தியதற்கு பாராட்டு விழா.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குபட்ட ஆரணி நகர் முழுவதும் குற்ற செயல்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் மற்றும் பொதுமக்கள் ஓத்துழைப்புடன் நகர் முழுவதும் 300 சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் தற்போது முதல் கட்டமாக 230 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டன. இதனால் கடந்த சில நாட்களாக குற்ற செயல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில் ஆரணி டவுன் 5வது வார்டு கவுன்சிலர் சுதா குமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஓன்றுணைந்து காந்தி ரோடு மார்க்கெட் வழியாகவும் அண்ணாசிலை உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக மலர் மாலை கேடயங்களை சீர்வரிசையாக சுமந்து கொண்டு வந்து ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் ஆரணி நகர் முழுவதும் சிசிடிவி கேமாரா பொருத்தியதற்கு பாராட்டு விழா நிகழ்ச்சி டி.எஸ்.பி பாண்டீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக டி.எஸ்.பி பாண்டீஸ்வரி இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி எஸ்.ஐ சுந்தரேசன் ஆகியோர்களுக்கு ஆளுயர மலர் மாலை அணிவித்தும் மற்ற காவலர்களுக்கு மாலை அணிவித்து கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று இரவு முழுவதும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்கள் நிம்மதியாக புத்தாண்டை கொண்டாடியதால் காவலர்கள் புத்தாண்டை கொண்டாடும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த காரணத்தினால் காவலர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி டி.எஸ்.பி பாண்டீஸ்வரிக்கு பொதுமக்கள் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். ஆரணி நகர் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தி நடவடிக்கை மேற்கொண்ட காவலர்களுக்கு பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து கேக் வெட்டி காவலர்களுக்கு ஊட்டி சம்பவம் போலீசார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.