காவலரின் மகனை பாராட்டி காவல் ஆணையர்.
தேசிய ரோலர் போட்டியில் வெற்றி பெற்ற மதுரை காவலரின் மகனை காவல் ஆணையர் பாராட்டினார்.;
62 வது தேசிய ரோலர் ஹாக்கி போட்டிகள் கோயமுத்தூர் VOC பார்க் மைதானத்தில் கடந்த டிசம்பர் 5 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் கலந்து கொண்டன. முடிவில் தமிழக அணி முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்ட மதுரை மாநகர் தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரியும் த.கா.நாகராஜன் என்பவரது மகன் ஸேயோன் மாரிஷ் வயது 10 என்பவர் தமிழக அணியின் கோல் கீப்பராக செயல்பட்டு சிறப்பாக விளையாடி தமிழக அணி தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக இருந்தவரை இன்று (ஜன.6)மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.