குமரி மாவட்டம் எஸ்டி மங்காடு அருகே நெடும்பரம்பு பகுதி சேர்ந்தவர் செல்வி என்பவர் மகன் கிருஷ்ணராஜ் ( 24) .இவர் செங்கல் சூளையில் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் கிருஷ்ணராஜ் வீட்டின் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். பின்னர் வெகு நேரமாகிய அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி தாயார் செல்வி சென்றார். அப்போது ஆற்றில் கிருஷ்ணராஜ் அசைவின்றி கிடந்தார். அவர் ஆற்றில் குளிக்க இறங்கிய போது படிக்கட்டில் தவறி விழுந்து தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு தண்ணீரில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடி அக்கம் பக்கத்தினர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.