கோவை: ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2025-01-09 05:30 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் நடுத்தர வர்க்க மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அரசு பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகள் கிடைக்காததால் ஆம்னி பேருந்துகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளனர்.சாதாரண நாட்களில் கோவையில் இருந்து நெல்லை செல்ல ரூ.500 முதல் ரூ.700 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.1500 முதல் ரூ.2300 வரை வசூலிக்கப்படுகிறது.இதேபோல் தென்காசி செல்ல ரூ.1000 முதல் ரூ.1900 வரையும், நாகர்கோவிலுக்கு செல்ல ரூ.1700 முதல் ரூ.2000 வரையும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.இந்த கட்டண உயர்வால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் ஆவலில் இருந்த நடுத்தர வர்க்க மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பொதுமக்கள் இந்த கட்டண உயர்வை கண்டித்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News