சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு..
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடத்தப்பெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடத்தப்பெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. சிறுபான்மையினர் மக்களின் சமூகம் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திடவும், பெரும்பான்மையினர் மக்களுக்கு நிகராக இச்சமூக மக்களை மேம்படுத்துவதற்கும் சிறுபான்மையினர் நலத்துறை இயங்கி வருகிறது சிறுபான்மையினர் சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று சிறுபான்மையினர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் திருவாரூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 40 ஏழை முஸ்லிம் மகளிருக்கு ரூ.3.90 இலட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளும், திருவாரூர் மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 10 ஏழை கிறிஸ்தவ மகளிருக்கு ரூ.1.60 இலட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளும் மேலும் கிறிஸ்தவ தேவாலயத்தில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் 4 நபர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்கள்.