மயில் வாகனத்தில் முருகப்பெருமான்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா நடைபெற்றது
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமான் வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் நேற்று (ஜன.9) மார்கழி மாத கார்த்திகை தினத்தை முன்னிட்டு முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனர்.