தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையும், தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரி, தமிழ்த்துறையும் இணைந்து, இரு நிறுவனமும் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில், ஒரு நாள் நாடகப்பயிற்சி பட்டறை வியாழக்கிழமையன்று கலைப்புலக் கருத்தரங்க அரங்கில் நடந்தது. நிகழ்விற்கு, தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) க.சங்கர் தலைமை வகித்தார். மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரி முதல்வர் மு.சுமதி முன்னிலை வகித்தார். தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தெ.வெற்றிச் செல்வன், தமிழ்ப் பல்கலைக்கழக கலைப்புலத்தலைவர் பெ.இளையாபிள்ளை, மன்னர் சரபோசி அரசுக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் இரா.சாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அச்ச சிறப்புப் பயிற்சியாளராக புதுச்சேரி யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவன இயக்குநர் ஞா.கோபி, இணைப்பயிற்சியாளராக ஏ.வெங்கடேசன், ஏ.கோவிந்தராஜ் ஆகியோர் செயல்பட்டு, மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரி மாணவர்களுக்கும், தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்களுக்கும் நாடகப் பயிற்சியினை வழங்கினர். இந்நிகழ்வில், 50 மாணவர்கள் நாடகப் பயிற்சியினைப் பெற்றனர். மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சி.அமுதா, தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவர் செ.கற்பகம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.