நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் "புகையில்லா போகி பண்டிகை" விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொங்கல் நாட்களின் போது பழைய பொருட்களை எரிப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமைகளை ஏற்படுத்தும் என்பதை மாணவ மாணவியருக்கு எடுத்துரைத்து துண்டு பிரசுரங்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நாமக்கல் சார்பில் "புகையில்லா போகி பண்டிகை" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்தார்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கள பணியாளர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பொங்கல் நாட்களின் போது பழைய பொருட்களை எரிப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமைகளை ஏற்படுத்தும் என்பதை மாணவ மாணவியருக்கு எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்து மாசு இல்லாமல் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடும் போது சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு போன்றவை தொடர்பான நோய்களை தவிர்க்கலாம் என கூறினார். இந்நிகழ்ச்சியில் தாவரவியல் துறை தலைவர் இராஜேஸ்வரி உட்பட தாவரவியல் துறை பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், தாவரவியல் துறை மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.