மணப்பாறை காவலரிடம் தகாத வார்த்தையில் பேசியவர் சிறையில் அடைப்பு
மணப்பாறை காவலரிடம் தகாத வார்த்தையில் பேசியவர் சிறையில் அடைப்பு;
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். அவரது கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் மகன் ராஜ்குமார் குடிபோதையில் தகறாறில் ஈடுபடுவதாக கூறி புத்தாநத்தம் காவல் நிலையத்திற்கு புகார் தகவல் தெரிவித்தார். அப்பொழுது கண்ணம்மாள் வீட்டிற்கு காவலர் பழனிக்குமார் சென்று பார்த்தபோது அவரை ராஜ்குமார் தகாத வார்த்தையில் தரக்குறைவாக பேசி தகறாறு செய்ததுள்ளார். இதுகுறித்து காவலர் பழனிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜகுமாரை புத்தாநத்தம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர்.