விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை.

ஆரணி அருகே விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை.;

Update: 2025-12-18 17:13 GMT
ஆரணி அருகே நடுக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பார்வதிஅகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுதாகரன் (48) வசித்து வருகிறார். இந்நிலையில் சுதாகரன் இவரது உறவினரான பார்வதிஅகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (25) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் வியாழக்கிழமை மாலை அவரின் இறுதி ஊர்வலத்தில் சுதாகரன் கலந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அதே ஊர்வலத்தில் சில இளைஞர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு உள்ளனர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் முன் விரோதம் காரணமாக ஊர்வலத்தில் சென்ற சுதாகரனை கல்லால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அருகே உள்ள விவசாய நிலத்தில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அங்கு என்ற உறவினர்கள் சுதாகரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News