தென்காசி மாவட்டத்தில் இன்று

தென்காசி மாவட்டத்தில் இன்று;

Update: 2025-12-18 18:16 GMT
டிசம்பர் 18 தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் இன்று ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் குளித்த மகிழ்ந்தனர். 2. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (டிசம்பர். 19) காலை பத்து மணி முதல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 3. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கோயில்களில் மார்கழி மூன்றாவது நாள் சிறப்பு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. 4. தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு ஓய்வூதியர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5. தென்காசி மாவட்டம் கீழ கடையம் பகுதியில் நாளை முதல் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 10 மணி வரை வாரச்சந்தை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கீழ கடையம் செம்மடம் பகுதியில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 6. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொத்தடிமைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தபட்டால் பணியில் அமர்த்தபட்டவருக்கு 50,000 ரூபாய் அபராதமும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 7. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் என் வாக்குச்சாவடி என்ற தலைப்பின் கீழ் திமுக ஆலோசனை கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது. 8. தென்காசி மாவட்டத்திற்கு நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வரவுள்ளதால் வாக்காளர்கள் தங்களது பெயர்கள் வரைவு பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 9. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் இன்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. மேலும் பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தராததை குறிப்பிட்டு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10. குற்றாலம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார். 11. தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சி பகுதிகளில் இன்று (18.12.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்.,இ.ஆ.ப. அவர்கள் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 12. தென்காசி மாவட்டம், ஆய்க்குடி ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (18.12.2025) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் நம் தேசம் அறக்கட்டளை சார்பில் நாஷா முக்த் பாரத் அபியான்திட்டத்தின் கீழ் நடைபெற்ற போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்.இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

Similar News