தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
படிப்படியாக குறைந்த நீர்வரத்து;
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது கடந்த வாரம் 5000 ஆயிரம் கண்ணாடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று வினாடிக்கு 2000 கன அடியாக நீர்வரத்து உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறக்காததால். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் எப்பொழுதும் ஆர்ப்பரித்துக் கொட்டும் மெயின் அருவி ஐந்தருவி சினி ஃபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது. இருப்பினும் வெளியூர் வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும் பரிசல் சவாரி செய்தும் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா, முதலைப்பண்ணை, மீன் காட்சியகம் மற்றும் தொங்குபாலம் மேல் நின்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை ரசித்து சென்றனர்.