மாயனூரில் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பயிலரங்க கூட்டம் நடைபெற்றது

கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார்;

Update: 2025-12-18 16:20 GMT
கரூர் மாவட்டம்,மாயனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் பயிலரங்க கூட்டம் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சக்தி கேந்திரா பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்றும், அதற்கு அனைத்து சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களது பூத் கமிட்டி பகுதியில் உள்ள வாக்காளர்களை சந்தித்து மோடி அரசின் சாதனை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கற்பகவள்ளி ரகுபதி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற அமைப்பாளர் காவேரி மோகன்ராஜ்,இணை அமைப்பாளர் சரவணன் மாவட்ட துணை தலைவர் சக்திவேல், மாநில செயற்கு உறுப்பினர் மகேஷ், குளித்தலை,கிருஷ்ணாராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய,நகர,பேரூர் கழக தலைவர்கள் மற்றும் சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News