கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட குழுவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்;
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட குழுவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தினை முழுமையாக அமல்படுத்த வேண்டும், குடிமனை பட்டா இல்லா அனைத்து பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி 10 லட்சம் ரூபாய் அரசு விடு வழங்க வேண்டும், பழங்குடியின மக்களுக்கான இனச் சான்று வழங்கிட தமிழக அரசின் 104 அரசாணையை மாநிலம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும், மத்திய, தமிழக அரசின் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஆரணி கோட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் குடியிருப்பில் தெருவிளக்கு, சிமெண்ட் சாலை, குடிநீர், தனிநபர் கழிவறை, இடுகாடு வசதிகளை செய்து தர வேண்டும் , திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடி பட்டியலில் உள்ள காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு காலதாமதம் இல்லாமல் இன எஸ்.டி சான்று வழங்க வேண்டும், ஜமுனாமரத்தூர் முதல் அமிர்தி வரை தார் சாலை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டதலைவர் பி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். சிஐடியு முன்னாள் தலைவர்கள் பி.கண்ணன், சி.அப்பாசாமி ஆகியோர் துவக்கஉரையாற்றினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பொன்னுசாமி, சி.பி.ஐ மாவட்ட செயலாளர் ஏ.செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.மேலும் இதில் நிர்வாகிகள் அய்யனார், ஏ.லட்சுமணன், டி.கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.