தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா
கலாச்சார அடையாளங்களை தத்ரூபமாகக் காட்டும் நிகழ்ச்சிகளான, மாட்டு வண்டி ஊர்வலம் ,ஜல்லிக்கட்டு காளைகள்,சேவல்கள் ,ஆடுகள் மாணவர்களின் பார்வைக்காக கொண்டு வரப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்தவிழாவிற்க்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன்அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அப்பொழுது பேசுகையில் இன்றைய பொங்கல் திருவிழாவில் உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமாகவும், விவசாயத்தின் மகத்துவத்தை உணர்த்தும் விழாவாகவும் பொங்கல் தினம் விளங்குகிறது.நமது வாழ்க்கையின் அடிப்படை விவசாயமே. உழவர் இல்லாமல் வாழ்வோடு தொடர்பான எதையும் நாம் கற்பனை செய்ய முடியாது. உணவின் முக்கியத்துவம் எவ்வளவு என்று அறிய, உழவரின் உழைப்பை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நமது பாரம்பரியத்தை மறக்காமல், அதை பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பும் கடமையும் உங்களிடம் உள்ளது . மேலும் இந்த பொங்கல் திருவிழாவால் உங்களின் உள்ளத்திலும், வாழ்க்கையிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்த எனது வாழ்த்துக்கள் என்று பேசினார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் வட்டாட்சியர் அ . சரவணன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு 101 சீர் தட்டுகலுடன் ஊர்வலம் வந்தனர் மற்றும் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய போட்டிகள், மற்றும் வேடிக்கை விளையாட்டுகள் நிகழ்ச்சியின் முக்கிய சிறப்புகளாக அமைந்தன. மாணவமாணவிகள் பாரம்பரிய உடைகளில் அழகாக தோற்றமளித்தனர். இந்த பொங்கல் விழாவின் முக்கிய அம்சமாக, கலாச்சார அடையாளங்களை தத்ரூபமாகக் காட்டும் நிகழ்ச்சிகளான, மாட்டு வண்டி ஊர்வலம் ,ஜல்லிக்கட்டு காளைகள்,சேவல்கள் ,ஆடுகள் மாணவர்களின் பார்வைக்காக கொண்டு வரப்பட்டது.மேலும் மாணவர்களால் அமைக்கப்பட்ட10 அடியில் செய்த பொங்கல் பானை மற்றும் பாரம்பரிய மாட்டுப் பொங்கல் காட்சிகள், 25 அடி உயர திருவள்ளுவர் உருவ படம், விவசாயத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் ஆவணப்படங்கள் மற்றும் அரங்கக் கலையியல் காட்சிகளும், பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும் கவனத்தை ஈர்க்க கூடியவையாக அமைந்தன. "பொங்கலோ பொங்கல்" என கொண்டாடிய அனைவரின் உற்சாகம், தமிழர் பாரம்பரியத்தின் அழகையும், சமூக ஒற்றுமையின் சக்தியையும் காட்டுகிறது." இந்த தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்த்தின் கூடுதல்பதிவாளர் முனைவர் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி முனைவர் S.நந்தகுமார் , முன்னதாக பொறியியல் கல்லூரி டீன் முனைவர் சேகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார், அனைத்து கல்லூரி டீன்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், சுமார் 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.