பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் ..

வழங்கல்

Update: 2025-01-10 06:29 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 4 லட்சத்து 37 ஆயிரத்து 253 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையொட்டி கள்ளக்குறிச்சி ராஜா நகர் கூட்டுறவு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, பன்னீர் கரும்பு மற்றம் வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது; மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் 4 லட்சத்து 37 ஆயிரத்து 180 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 73 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் என மொத்தம் 4 லட்சத்து 37 ஆயிரத்து 253 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

Similar News