விவசாயிகள் தரும் பாலுக்கு கூடுதலாக 50 பைசா ஊக்கத்தொகை : ஆவின் அறிவிப்பு
ஆவின் பால் நிறுவனம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியச் செயலாட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம், ஆவின் பொது மேலாளா் எஸ்.சரவணக்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு, சங்கங்கள் மூலம் தொடர்ந்து பால் வழங்கி வரும் விவசாய பெருமக்களை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி- 2025 மற்றும் பிப்ரவரி- 2025 ஆகிய மாதங்களுக்கு, ஒன்றியத்திற்கு பால் வழங்கும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அவர்கள் வழங்கும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஏற்கனவே அரசு வழங்கும் கூடுதல் ஊக்க விலை ரூ.3/- உடன் மேலும் கூடுதலாக ஒன்றியம் தனது சொந்த நிதியிலிருந்து லிட்டர் ஒன்றுக்கு 50 காசுகள் கூடுதல் ஊக்க விலையாக வழங்கும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.