அரசு பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சிலம்பகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பொங்கல் விழா 

Update: 2025-01-10 06:46 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கல்வி மாவட்டம் வெள்ளகோவில் வட்டாரம் சிலம்பகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் திருவள்ளுவர் தினம் ,உழவர் திருநாள் , தைத்திருநாளினை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் கோ.பிரபாகர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு எஸ்.எம்.சி  பொங்கல் வைத்து வெகு விமர்சியாக கொண்டாடினார்கள். பள்ளி மேலாண்மைக்குழுவினர் தொடர்ந்து 5 ஆண்டுகளாக வருடம் ஒரு புதிய வண்ண சீருடை அணிந்து இந்த பொங்கலை கொண்டாடினர்.  அலங்கரிக்கப்பட்ட மாவிளக்கு , முளைப்பாரி பள்ளிக்கு எடுத்து வந்து செங்கரும்பு மஞ்சள் கொத்து வைத்து 12 சக்கரைப்பொங்கல் புதுப்பானையில் வைத்து கும்மி நடனத்துடன்  கொண்டாடினார்கள். நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலர் அருள் ஜோதி , வட்டாரக்கல்வி அலுவலர் சிவக்குமார் வட்டார வள மைய பொறுப்பாளர் மீனாட்சி, வழக்கறிஞர் ரோட்டரி வெங்கடசுப்பு,  அருகாமையில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் தனலட்சுமி, ரவி, குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் திவ்யா, முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி விழாவை வழி நடத்தினார்கள். மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்களுக்குமாய் 20க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது ஒருங்கிணைப்பாளர்களாக பூபதி, கதிர்வேல், மணி, ரமேஷ் அகியோர்களுடன்  இந்த தொடர் நிகழ்வில் மாலை பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது தீபாவளி அன்று பூந்தளிர்களுக்கு புத்தாடை திட்டத்தில் புத்தாடை பெறாத பள்ளிகளின் பெற்றோரை இழந்த அல்லது ஒற்றை பெற்றோரை கொண்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. சதீஷ், கீர்த்தனா , லலிதாம்பிகை ஆகியோர்க்கு கல்வி ஆர்வலர் விருது வழங்கப்பட்டது. மதிய உணவு சாரதா, கெளசல்யா ஆகியோரால் பரிமாறப்பட்டது. கோல போட்டி நடுவராக அங்கன்வாடி வசந்தா மணி செயல்பட்டார். நிறைவில் பள்ளியின் தற்காலிக ஆசிரியர் கவிதா நன்றி கூறினார். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பத்தாயிரம் மதிப்பில் பரிசு வழங்கப்பட்டது.

Similar News