சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

Update: 2025-01-10 01:13 GMT
இந்துகளின் முக்கிய விரதவழிபாட்டில் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி, இந்தவைகுண்ட ஏகாதசி வைபவம் இன்று அணைத்து பெருமாள்கோவில்களிலும்  நடைபெற்று வருகிறது. சேலத்தில் உள்ள அணைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று வைகுண்ட ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவிலில் அதிகாலை 3 மணி அளவில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உட்பிரகாரத்தில் வளம் வந்து பின்னர் வடக்கு புரம் அமைந்துள்ள வருடம் ஒருமுறை திறக்கப்படும் பரம்பத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லகில் பவனி வந்தார். இதனை தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோவிலை சுற்றி வலம் வந்த பின் பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News