அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை

Update: 2025-01-10 06:58 GMT
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது இது குறித்து,  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும், உண்டு உறைவிடப்பள்ளியான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை கொண்ட அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2025-2026ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 01.04.2013லிருந்து 31.03.2015 தேதிக்குள் பிறந்திருக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே 6ஆம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 01.04.2010லிருந்து 31.03.2012 தேதிக்குள் பிறந்திருக்கும் மாணவர்கள் மட்டுமே 9ஆம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை மற்றும் காலியாக உள்ள இடங்கள் (தோராயமாக): 6ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் OMR என்ற தேர்வு முறையில் (Multiple Choice Questions) எழுதவேண்டும். 6ஆம் வகுப்பு 65 இடங்கள் (பெண்கள்-10 + ஆண்கள்-55), 9ஆம் வகுப்பு-10 இடங்கள் (பெண்கள்-1 + ஆண்கள்-09) இட ஒதுக்கீடு 15% இடங்கள் பட்டியல் வகுப்பினருக்கும் (SC), 7.5% இடங்கள் பழங்குடியினருக்கும் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 27% இடங்கள் ஒதுக்கப்படும். மீதமுள்ள இடங்களில் 67% இடங்கள் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 33% இடங்களை பிற மாநிலத்தவர்க்கும் ஒதுக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் 25% இடங்கள் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்குரிய குழந்தைகளுக்கும் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கும் ஒதுக்கப்படும். தேர்வுக் கட்டணம், விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் மற்றும் இணையதள முகவரி படைவீரர், முன்னாள் படைவீரர் ரூ.800/- ஐ கட்டணம் செலுத்தி 24.12.2024 முதல் 13.01.2025க்குள் https://exams.nta.ac.in/AISSEE என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News