கலிங்கப்பட்டி பஞ்சாயத்து ஆபீஸ் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை
பஞ்சாயத்து ஆபீஸ் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஒன்றியம் கலிங்கப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அங்குள்ள மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாயத்தில் பிள்ளையார்குளம், வீரனாபுரம், ஆவாரம்பட்டி, ராமராஜபுரம், கீழமரத்தோணி, மேலமரத்தோணி, வேதமுத்துநகர், முத்துரெட்டியப்பட்டி, மகாதேவர்பட்டி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு பஞ்சாயத்து தலைவராக மணிமொழி சந்திரசேகர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பணிகள் முடிந்த நிலையில் பஞ்சாயத் தலைவர் மணிமொழி சந்திரசேகர் மற்றும் அலுவலக உதவியாளர் சிவஞானம் ஆகியோர் அலுவலகத்தை பூட்டி சென்றனர். இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு பஞ்சாயத்து அலுவலகம் தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் துர்நாற்றம் பேசியது. இதனைத் தொடர்ந்து அருகில் குடியிருப்பவர்கள் சம்பவம் இடம் சென்று பார்த்த போது பஞ்சாயத்து அலுவலகம் உள்ளே தீப்பற்றி எரிவது . சம்பவத்தை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் அங்குள்ள மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர் ஆனாலும் தீப்பற்றி பரவி எரிய தொடங்கியது. உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்து கட்டுப்படுத்தினர். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.