பெண் ஊராட்சி தலைவியை தாக்கிய விவசாயி கைது

உத்தரமேரூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை

Update: 2025-01-10 11:44 GMT
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமயிலுாரைச் சேர்ந்தவர் மாதவன் மனைவி சற்குணா, 37; பட்டியலின பெண் ஊராட்சி தலைவர்.இவருக்கு சொந்தமான நிலத்திற்கு, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ரவி, 55, என்பவரின் நிலம் வழியாக தான் செல்ல வேண்டும்.கடந்த 31ம் தேதி, அவ்வழியாக சென்ற ஊராட்சி தலைவி சற்குணாவை, ரவி வழிமறித்து கீழே தள்ளி, காலால் உதைத்துள்ளார். பின், அவரது ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசியுள்ளார். அங்கிருந்தோர் சற்குணாவை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ரவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஊராட்சி தலைவி கூறுகையில், ''ஊராட்சிக்கு சொந்தமான சுடுகாடு நிலத்தை, ரவி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அதை தட்டி கேட்டதால், என்னை தாக்கி, இழிவாக பேசினார்,'' என்றார்.

Similar News