ஜல்லிக்கட்டு பணிகள்: அமைச்சர் ஆய்வு.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் ஜனவரி 16ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ( ஜன.10) வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் நடந்து வரக்கூடிய முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.