மூலனூரில் இரவிலும் கலைக்கட்டும் வாரச்சந்தை
மூலனூரில் இரவிலும் கலைக்கட்டும் வாரச்சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சி
மூலனூர் பேரூராட்சியில் அமைந்துள்ள வாரச்சந்தை வளாகம் நூற்றாண்டை தொடப்போகும் நிலையில் மூலனூர் பேரூராட்சி நிர்வாகத்தால் அதனடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சில மாதங்களுக்கு முன் கலைஞர் நூற்றாண்டு நினைவுச்சந்தையாக திறக்கப்பட்டது பாதுகாப்பான கட்டிடம் கழிப்பிட வசதி மின்விளக்குகள் என்ற நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த நிலையில் வெளியூர் வியாபாரிகள் அதிகம் வரத் தொடங்கினர் அதன் பலனாக அதிகாலை தொடங்கி இரவு ஒன்பது மணி வரையிலும் மின்விளக்குகளில் வெளிச்சத்தில் சந்தை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது இது குறித்து சந்தையின் ஏல தாரர் பாலமுருகன் கூறியதாவது பழமை வாய்ந்த மூலனூர் வார சந்தை ஆடு மாடுகள் விற்பனைச் சந்தேகம் முன்பிருந்தது ஆனால் அடிப்படை கட்டமைப்பு பழுதடைந்த நிலையில் மிக குறைவான வியாபாரிகள் மட்டுமே வந்து கொண்டிருந்தனர் ஆடு, மாடு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டது காய்கறிகள் விற்பனை மலிந்து போயிருந்த நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்படுத்தப்பட்ட சந்தையில் சுமார் 5,000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர் வியாபாரிகள் வியாபாரிக்காக வருகின்றனர் நாள் ஒன்றுக்கு சுமார் 60 டன் காய்கறிகள் விற்பனையாகிறது என்று தெரிவித்தார்