கள்ளக்குறிச்சி குறைதீர் கூட்டம்

கூட்டம்

Update: 2025-01-10 07:13 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று(10 ம் தேதி) நடக்கிறது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்தி குறிப்பு :கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் மண்டல அளவிலான பணியாளர் நாள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இன்று(10ம் தேதி) காலை 11 மணிக்கு பணியாளர் நாள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது பணி தொடர்பான குறைகள் இருந்தால் மனுவாக அளித்து பயன் பெறலாம். மேலும், பணியின் போது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News