திருநாவலுாரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2025-01-10 07:06 GMT
உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் ஊராட்சியில் இலவச தொகுப்பு வீடு திட்டத்திலும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திலும் ஜல்ஜீவன் திட்டத்திலும் ஊழல் செய்ததை கண்டித்து திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு பா.ஜ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்பாட்டத்திற்கு பா.ஜ., ஒன்றியத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் அருள், மாவட்ட பார்வை யாளர் ராஜ்குமார், மாவட்ட பொது செயலாளர்கள் ராஜேஷ், தியாகராஜன், ஜெயதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் கஜேந்திரன், முன்னாள் மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட துணை தலைவர்கள் சரவணன், பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட பொது செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய தலைவர் வீரபாண்டியன், கலை பிரிவு சுந்தர், ஒன்றிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News