கள்ளத்தனமாக மது விற்பனை 809 வழக்குகள் பதிவு

திண்டுக்கல் மாவட்டம் 2024-ம் ஆண்டில் கள்ளத்தனமாக மது விற்பனை தொடர்பாக 809 வழக்குகள் பதிவு, 515 பேர் கைது, 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2025-01-09 18:51 GMT
திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த 2024-ம் ஆண்டு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பது வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வது தொடர்பாக 809 வழக்குகள் பதிவு செய்துள்ளனர் இந்த வழக்குகள் சம்பந்தமாக 515 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பிரதீப் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி.முருகன், சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் மற்றும் காவலர்கள் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு 7 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News