குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பழவிளை, காமராஜர் தெருவை சேர்ந்தவர் குமரேசன் மனைவி முருகேஸ்வரி (55). நேற்று வீட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ்சில் புறப்பட்டார். கோணம் அரசு கல்லூரி ஸ்டாப்பில் முருகேஸ்வரி இறங்கிய போது, அவரது கைப்பை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பார்த்தபோது பையில் இருந்த ரூ. 97 ஆயிரத்து 300 - ஐ காணவில்லை. இது குறித்து முருகேஸ்வரி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபரை தேடி வருகின்றனர்.