பாலியல் திருமணம் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அறிக்கை பாலியல் திருமணம் செய்த குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிராஜா(27) இவர் அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை சமூக நலத்துறை அலுவலர் அம்சவல்லி(58) மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாண்டியராஜா(27) மற்றும் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த காந்தி(47), கண்ணாத்தாள்(43), நாகராஜ்(45), பஞ்சு(42) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.