காரிமங்கலம் அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்
காரிமங்கலம் அருகே மல்லிகுட்டையில் மண் கடத்திய லாரி பறிமுதல்,ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் காரிமங்கலம், மல்லிகுட்டை பகுதியில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால், ஓட்டுநர் லாரியில் இருந்த மண்ணை சாலையில் கொட்டி விட்டு, வேகமாக ஓட்டிச்சென்றார். அந்த லாரியை அதிகாரிகள் துரத்தி சென்று மடக்கிய போது, ஓட்டுநர் தப்பியோடி விட்டார். லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்த போது, அதில் மண் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து. லாரியை காரிமங்கலம் காவலர்கள் அதிகாரிகள் ஒப்படைத்தனர். காவலர்கள் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுனர் நிம்மாங்கரை பகுதியை சேர்ந்த வேல் முனியப்பன் என்பவரை தேடி வருகின்றனர்.