ராசிபுரத்தில் ஹிந்து மஹா வம்சம் சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்கல்.

ராசிபுரத்தில் ஹிந்து மஹா வம்சம் சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்கல்.

Update: 2025-01-10 12:56 GMT
இராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஹிந்து மஹா வம்சம் சார்பாக பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் மக்கள் நலக்குழு தலைவர் முன்னாள் கவுன்சிலர் V.பாலு, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவங்கி வைத்து பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு உணவு , தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஹிந்து மஹா வம்சம் தலைவர் கௌரிசங்கர், செயலாளர் சீனிவாசன், மற்றும் R.D.தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் இவர்கள் வழங்கி வருகின்றனர்.

Similar News