தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2025-01-10 15:42 GMT
அரியலூர், ஜன.10- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழத்தில் உள்ள 52 சுங்க சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.3,817 கோடி சுங்க வரி வசூல் செய்வதை கண்டித்தும், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை கிராமபுற இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் தமிழக அரசு நிர்வகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பைரவன் தலைமை வகித்தார். அரசு ஊழிய சங்கம் மாவட்டத் தலைவர் வேல்முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News