திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

Update: 2025-01-10 15:29 GMT
அரியலூர், ஜன. 10- அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழக் கூடல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.போட்டிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். பட்டி மன்ற பேச்சாளர் பவித்ரா கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி குழந்தைகள் திருக்குறளை தெளிவாக கற்றால் வாழ்வில் எவ்வித குறைகளும் இன்றி வாழலாம் .மனித நாகரீகத்துக்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள் நம் தமிழர்கள் . உலகத்தில் உள்ள 800 கோடி மக்களின் கையிலும் இருக்க வேண்டிய உன்னத நூல் திருக்குறள். வள்ளுவர் நமக்கு வழங்கிய திருக்குறளை தெளிவாக கற்று அதன்படி வாழ்பவர்களால் எல்லா சாதனைகளையும் படைக்க முடியும். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முதன் முதலில் படிக்க கொடுக்க வேண்டிய நூல் திருக்குறள். அனைத்து குழந்தைகளும் திருக்குறளை நன்கு கற்று ஒட்டுமொத்த உலகையும் வழி நடத்துபவர்களாக விளங்க வேண்டும் என்றார்.தொடர்ந்து 6}8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ,ஒரு பிரிவாகவும், 9 }10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின் நடுவர்களாக நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் சுரேஷ் , என் .ஆர் .ஐ .ஏ .எஸ் அகதெமி நிர்வாகி பார்வதி, சமூக  ஆர்வலர் நிக்கில்ராஜ் ஆகியோர் ஆகியோர் செயல்பட்டனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடேசன், அந்தோணிசாமி, பாலமுருகன், ஆய்வ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர் .முன்னதாக தமிழ் ஆசிரியை அபிராமி அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் செந்தமிழ் செல்வி நன்றி கூறினார். :

Similar News