இலுப்பையூர் அரசுப் பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு

இலுப்பையூர் அரசுப் பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Update: 2025-01-10 15:51 GMT
அரியலூர், ஜன.10 - அரியலூர் அடுத்த இலுப்பையூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படை சார்பில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயராணி தலைமை வகித்து, போகிப் பண்டிகை நாளில் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களை எரிப்பதும் வழக்கம். ஆனால் பொதுமக்கள் பலரும் தங்களிடமுள்ள பழைய டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகை மற்றும் நச்சுத்துகள்கள் காற்றை மாசுபடுத்துகின்றன. மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படுத்துகின்றறன. ஆஸ்துமா, மூச்சுத் திணறறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகின்றன. பார்க்கும் திறறனும் குறைபடுகிறது. எனவே, போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதையடுத்து அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், அரியலூர் வட்டார அளவில் நடைபெற்ற தேன்ச்சிட்டு இதழ் விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் நேகா யாத்ரா ராய் ,ராஜஸ்ரீ, அனுஸ்ரீ, விக்னேஷ், சுந்தரமூர்த்தி ஆகியோருக்கும், மாவட்ட அளவில் தமிழ் துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் விநாடி வினா போட்டிகளில் கலந்துகொண்டு மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாயூபி, தீபக் , மதியழகன், பிரிட்டோ ஆல்பர்ட் அருள்ராஜ் ,லதா கஸ்தூரி ஆகியோர்  செய்திருந்தனர்.

Similar News