மத்திய அமைச்சரை போராட்ட குழுவினர் சந்திக்க அண்ணாமலை ஏற்பாடு.

மதுரை அரிட்டாபட்டி கனிம சுரங்கம் சம்பந்தமாக மத்திய அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக மக்களிடம் அண்ணாமலை உறுதி அளித்தார்.

Update: 2025-01-10 15:39 GMT
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி ஆகிய பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏலத்தை முழுவதும் ரத்து செய்யக்கோரி கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அ. வள்ளாளபட்டியில் கிராம பொதுமக்களை நேரடியாக சந்தித்து இந்த பகுதி பொதுமக்கள் கடந்த 7-ந் தேதி அன்று நடத்திய போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் திரும்ப பார்க்க வைத்தது போல் இருந்தது. மேலூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை விவசாய பெருங்குடி மக்கள் மதுரை வரை நடந்தை நான் தொலைக்காட்சியில்பார்த்தபோது உங்கள் கண்களில் தண்ணீர் வந்ததோ இல்லையோ. என் கண்களில் தண்ணீர் வந்தது. அதனால் தான் நான் இன்று (ஜன.10) நேரடியாக மக்களை சந்தித்து அ.வள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி சுற்றுப்புற கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஒருபோதும் வராது என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் மத்திய கனிமவளத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை வர இருக்கிறார். இந்த போராட்டக் குழு நிர்வாகிகளை அமைச்சரை சந்திக்க வைத்து இந்த திட்டம் இந்த பகுதியில் வராது என்பதை அவர் மூலமாகவே தெரிவிக்க வைக்கிறேன் என்று உறுதி கூறினார். மேலும் அந்த தேதியில் அவர் வரவில்லை என்றால் வரும் 20ஆம் தேதி டெல்லி சென்று போராட்ட குழுவினரை நேரடியாக சந்திக்க நான் முயற்சிப்பேன் என்று கூட்டத்தில் தெரிவித்தார். இதை கேட்ட பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.வருகிற பொங்கல் தினத்தை நீங்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களிடம் கூறினார்.

Similar News