தனியார் கல்லூரியில் கலை கட்டிய சமத்துவ பொங்கல் திருவிழா..

திருவாரூர் தனியார் கல்லூரியில் களை கட்டிய பொங்கல் திருவிழா - DJ இசையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Update: 2025-01-10 18:12 GMT
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் பண்டிகையை எந்தவொரு மத பாகுபாடின்றி சமத்துவ பொங்கலாக கொண்டாடுகின்றனர். இதில் அனைத்து மதத்தினரும் ஒன்றினைந்து பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டு ஆடல் பாடல் என கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் திருவாரூரில் உள்ள தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, புடவை மற்றும் பாவாடை தாவணி அணிந்து வந்திருந்தனர். விழாவில் பங்கேற்ற மாணவர்கள் பொங்கல் பானைகள், கரும்புகள், பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்கள், மஞ்சள் முதலியவற்றை கொண்டு கல்லூரி வளாகத்திலேயே பொங்கல் வைத்து இயற்கையை வழிபட்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் DJ இசைக்கு ஏற்ப ஆடி பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

Similar News